Advertisement

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு

By: vaithegi Sat, 29 Apr 2023 11:35:36 AM

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு

சென்னை: சென்னையில் கடந்த 2 நாட்களாகவே தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று முன் தினம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து 5,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோன்று சவரனுக்கு ரூ. 16 குறைந்து ரூ.45,120 ஆக விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 1 சவரன் தங்கம் 160 ரூபாய் குறைந்து சவரன் ரூ.44,960-க்கு விற்பனை செய்யப்பட்டது.

jewelery gold price,chennai ,ஆபரண தங்கத்தின் விலை,சென்னை

1 கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.5,620-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் குறைந்து ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. 1 கிலோ வெள்ளி 80,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.45 ஆயிரத்து 040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனை அடுத்து1 கிராம் தங்கத்தின் விலை ரூ.10 அதிகரித்து ரூ.5 ஆயிரத்து 630க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று, வெள்ளியின் விலையும் அதிகரித்து உள்ளது. 1 கிராம் வெள்ளியின் விலை ரூ.40 காசுகள் உயர்ந்து 80 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :