Advertisement

மகாராஷ்டிராவில் வெங்காயம் கிலோ ரூ.2 முதல் ரூ.4 வரை ஏலம் போனது.

By: Nagaraj Tue, 28 Feb 2023 10:30:14 PM

மகாராஷ்டிராவில் வெங்காயம் கிலோ ரூ.2 முதல் ரூ.4 வரை ஏலம் போனது.

மும்பை: தொடர்ந்து சரிந்து வரும் வெங்காய விலை... மகாராஷ்டிராவில் வெங்காயம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையான நாசிக் லசல்காவ் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் நேற்று காலை வெங்காய ஏலம் தொடங்கியது

வெங்காயம் கிலோ ரூ.2 முதல் ரூ.4 வரை ஏலம் போனது. குறைந்த விலைக்கு வெங்காயம் ஏலம் போனது விவசாயிகளை கொதிப்படைய வைத்துள்ளது.

kilo,marathi,onion,tender, ,ஏலம், கிலோ, மராட்டியம், வெங்காயம்

அவர்கள் விலை வீழ்ச்சியை கண்டித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மராட்டிய மாநில வெங்காய உற்பத்தியாளர்கள் சங்கம் தலைமையில் விவசாயிகள் வெங்காய ஏலத்தை தடுத்து நிறுத்தினர்.

இதனால் நாசிக் மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது. ஏலம் நிறுத்தப்பட்டது குறித்து வெங்காய உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பாரத் டிகோல் கூறுகையில், “”தற்போதைய சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில், விவசாயிகளிடம் இருந்து வெங்காயம் குவிண்டால் ஒன்றுக்கு, 1,500 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என, அரசு அறிவிக்க வேண்டும்.

தற்போது கிலோ ரூ.3, 4, 5-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.15-20 வரை தர வேண்டும். எங்களின் கோரிக்கை இன்று நிறைவேற்றப்படவில்லை எனில், நாசிக் லசல்காவ் மார்க்கெட்டில் ஏலம் தொடங்காது” என்றார்.

Tags :
|
|
|