Advertisement

கடந்த 1வாரத்தில் இதன் விலையானது கிராமிற்கு ரூ.5,000 ஐ தாண்டி விற்பனை

By: vaithegi Thu, 08 Dec 2022 3:05:56 PM

கடந்த 1வாரத்தில் இதன் விலையானது கிராமிற்கு ரூ.5,000 ஐ தாண்டி விற்பனை

சென்னை: கிராமிற்கு ரூ.5,000 ஐ தாண்டி விற்பனை .... ஆபரணத் தங்கம் என்பது வெறும் அணிகலனாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீடாகவும் உள்ளது. பாதுகாப்பாக உள்ள முதலீடுகளில் தங்கம் தான் முன்னிலையில் உள்ளது. நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால் முதலீடு செய்ய நினைப்பவர்கள் அதிக அளவில் தங்கத்தின் மீது முதலீடு செய்கின்றனர்.

இதனால் தங்கத்திற்கான தேவை அதிகரிப்பதால் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக, கடந்த 1வாரத்தில் தங்கத்தின் விலையானது கிராமிற்கு ரூ.5,000 ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

gold,sale ,தங்கம் ,விற்பனை

எனவே அதன்படி, டிசம்பர் 8ம் தேதியான இன்றைய காலை நிலவரத்தின் படி, 22 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.5023க்கும், 1 சவரன் ரூ.40,184 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இதேபோல், 24 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.5425 க்கும், 1 சவரன் ரூ. 43400 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதிலும் குறிப்பாக வெள்ளியின் விலையானது நேற்றை விட இன்று 30 பைசா அதிகரித்து 1 கிராம் ரூ.71.30 க்கும், 1 கிலோ ரூ.71300 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|