Advertisement

சின்ன வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

By: vaithegi Tue, 17 Oct 2023 09:47:40 AM

சின்ன வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

சென்னை : விலை கிடுகிடு உயர்ந்துள்ளது .. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு வருகிறது.எனவே இதன் காரணத்தாலும் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதாலும் காய்கறிகளின் விலையானது சற்று அதிகரித்து உள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ள நிலையில் திடீரென உயர்ந்துள்ள காய்கறிகளின் விலையால் சாமானிய மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். மேலும் பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில் காய்கறிகள் உள்ள மேலும் அதிகரிக்கும் எனவே கூறப்படுகிறது.

onion price,chennai ,சின்ன வெங்காயத்தின் விலை ,சென்னை

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலை ஆனது கிலோ 14 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.உருளைக்கிழங்கு கிலோ 32 ரூபாய்க்கும் ,கேரட் 35 ரூபாய்க்கும், பீன்ஸ் 70 ரூபாய்க்கும் ,தேங்காய் 32 ரூபாய்க்கும் ,பீட்ரூட் கிலோ 40 ரூபாய்க்கும் ,

இஞ்சி கிலோ 210 ஆகவும், மாங்காய் கிலோ 80 ரூபாயாகவும் ,வெண்டைக்காய் கிலோ ₹20 ஆகவும் விற்பனையாகி வருகிறது.இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை அதிரடியாக உயர்ந்து உள்ளது.கடந்த வாரத்தை காட்டிலும் 50 ரூபாய் அதிகரித்து, 1 கிலோ சின்ன வெங்காயத்தின் விலை 130 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது..

Tags :