Advertisement

இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றத்துடன் வர்த்தகம்

By: vaithegi Mon, 10 July 2023 11:36:43 AM

இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றத்துடன் வர்த்தகம்

மும்பை : கடந்த 2 வாரங்களாகவே இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி கொண்டு வருகிறது. அந்தவகையில், 2-வது வாரத்தில் சென்செக்ஸ் 65,000 புள்ளிகளைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது. எனவே அதன்படி, வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

இதையடுத்து இன்றைய வர்த்தக நாளில் 65,482 புள்ளிகளாக தொடங்கிய சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 314.80 புள்ளிகள் உயர்ந்து 65,595 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 96.50 புள்ளிகள் உயர்ந்து 19,428 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

மேலும் முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 65,280 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,331 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. சென்செக்ஸ் குறியீடு 65 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகம் நடைபெற்று வருவதால் முதலீட்டாளர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்

sensex,nifty ,சென்செக்ஸ் ,நிஃப்டி


இதன் இடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு சந்தையில் முதலீடு செய்து வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து கொண்டு வருகின்றனர். கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட ரூ.30,000 கோடிக்கு மேல் முதலீடு செய்து உள்ளனர்.

பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால் சென்செக்ஸ் குறியீட்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், அல்ட்ராடெக் சிமெண்ட், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஃபைனான்ஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, எச்சிஎல் டெக்னாலஜிஸ், பஜாஜ் ஃபின்சர்வ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.

Tags :
|