Advertisement

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது

By: vaithegi Wed, 28 June 2023 4:29:57 PM

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது

இந்தியா: சென்செக்ஸ் 499 புள்ளிகள் அதிகரிப்பு .... முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது, அதானி குழும நிறுவன பங்குகளின் விலை அதிகரித்தது, எச்.டி.எஃப்.சி. மற்றும் எச்.டி.எஃப்.சி. வங்கி பங்குகளின் விலை தொடர்ந்து அதிகரித்தது போன்ற காரணங்களால் இன்று பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன.

இதனை அடுத்து சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாடா மோட்டார்ஸ் மற்றும் சன் பார்மா உள்பட மொத்தம் 24 நிறுவன பங்குகளின் விலை அதிகரித்தது . ஆனால் அதேவேளையில், டெக் மகிந்திரா மற்றும் மகிந்திரா அண்ட் மகிந்திரா உள்பட மொத்தம் 6 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

stock trading,stock market ,பங்கு வர்த்தகம் , பங்குச் சந்தை


மேலும் மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,790 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,707 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 131 நிறுவன பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.294.14 லட்சம் கோடியாக அதிகரித்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.2.01 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இதையடுத்து இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 499.39 புள்ளிகள் அதிகரித்து 63,915.42 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 154.70 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,972.10 புள்ளிகளில் முடிவுற்றது.

Tags :