Advertisement

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது

By: vaithegi Thu, 17 Aug 2023 4:19:16 PM

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது

மும்பை : சென்செக்ஸ் 388 புள்ளிகள் சரிவு.. சீனா பொருளாதாரம் குறித்த கவலை, வட்டி விகிதம் தொடர்பான அமெரிக்க பெடரல் வங்கி நிலைப்பாடு போன்ற எதிர்மறையான சர்வதேச நிலவரங்கள் மற்றும் உள்நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டைட்டன் மற்றும் எஸ்.பி.ஐ. உள்பட மொத்தம் 7 நிறுவன பங்குகளின் விலை அதிகரித்தது. பார்தி ஏர்டெல் நிறுவன பங்கின் விலையில்எந்த வித மாற்றம் இல்லை. ஆனால் அதேவேளையில், ஐ.டி.சி. மற்றும் பவர் கிரிட் உள்பட மொத்தம் 22 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

stock trading,stock market ,பங்கு வர்த்தகம் , பங்குச் சந்தை

இதையடுத்து மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,834 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,742 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 164 நிறுவன பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.303.90 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ. 56 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

மேலும் இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 388.40 புள்ளிகள் குறைந்து 65,151.02 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 99.75 புள்ளிகள் சரிவு கண்டு 19,365.25 புள்ளிகளி

Tags :