Advertisement

இந்தியாவின் அதிவேக நெட்வொர்க் விவரங்கள் - ஜியோ பயனர்கள் அதிர்ச்சி

By: Karunakaran Fri, 30 Oct 2020 3:48:10 PM

இந்தியாவின் அதிவேக நெட்வொர்க் விவரங்கள் - ஜியோ பயனர்கள் அதிர்ச்சி

நெட்வொர்க் ஆய்வு நிறுவனமான ஊக்லா வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், இந்திய டெலிகாம் சந்தையில் 2020 ஆண்டின் மூன்றாவது காலாண்டில் அதிவேக மொபைல் ஆபரேட்டராக வி (வோடபோன் ஐடியா) இருந்தது. முன்னணி நிறுவனமான ஜியோ 4ஜி சேவை வழங்குவதில் முதலிடம் பிடித்து இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அதிவேக இணைய வசதி ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஏற்ப வேறுபடுகிறது. இதில் ஐதராபாத் அதிவேக டவுன்லோட் வேகம் வழங்கி இருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த டவுன்லோட் வேகம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 11.6 சதவீதம் அதிகரித்து உள்ளது.

india,fastest network,jio users,vi ,இந்தியா, வேகமான நெட்வொர்க், ஜியோ பயனர்கள், விஐ

ஊக்லா வெளியிட்ட அறிக்கையின் படி, வி நிறுவனத்தின் சராசரி டவுன்லோட் வேகம் 13.74Mbps ஆகவும், 6.19Mbps அப்லோட் வேகம் வழங்கி இருந்தது. இதைத் தொடர்ந்து ஏர்டெல் 13.58Mbps டவுன்லோட், 4.15Mbps அப்லோட் வேகம் வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதே காலக்கட்டத்தில் ஜியோ 9.71Mbps டவுன்லோட் வேகமும், 3.41Mbps அப்லோட் வேகம் வழங்கி இருக்கிறது. இது ஜியோ பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நாட்டில் அதிவேக டேட்டா கிடைக்கும் நகரங்கள் பட்டியலில் சென்னை நான்காவது இடத்தில் உள்ளது.

Tags :
|