Advertisement

இன்பினிக்ஸ் புதிய எக்ஸ்1 சீரிஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்

By: Nagaraj Wed, 16 Dec 2020 3:56:45 PM

இன்பினிக்ஸ் புதிய எக்ஸ்1 சீரிஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி மாடல் அறிமுகம்... இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய எக்ஸ்1 சீரிஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இவை 32 இன்ச் ஹெச்டி மற்றும் 43 இன்ச் புல் ஹெச்டி வேரியண்ட்களில் கிடைக்கின்றன.

புதிய டிவி மாடல்கள் மெல்லிய பெசல்கள், இன்பினிக்ஸ் எபிக் 2.0 பிக்சர் என்ஜின் வழங்கப்பட்டு கொண்டுள்ளன. இரு தொழில் நுட்பங்களும் டிவி பார்க்கும் போது தலைசிறந்த அனுபவத்தை வழங்குகின்றன. இத்துடன் HDR 10 வசதி, அதிகளவு நிறங்கள், 400 நிட்ஸ் பிரைட்னஸ், காட்சிகளை அதிக துல்லியமாக காண்பிக்கும் திறன் கொண்டிருக்கின்றன.

இத்துடன் குவாட்கோர் மீடியாடெக் 6683 பிராசஸர், மாலி 470 MP3 GPU, 1 ஜிபி DDR4 ரேம், 8 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 9.0 OS , பில்ட் இன் குரோம்காஸ்ட், கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் நெட்ப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப், ஹாட்ஸ்டார் போன்ற செயலிகளுக்கான வசதி வழங்கப்பட்டு உள்ளது.

Tags :
|