Advertisement

பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு என்று தகவல்

By: Nagaraj Wed, 12 Oct 2022 10:43:36 PM

பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு என்று தகவல்

புதுடில்லி: பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு... சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.


அந்த வகையில், கடந்த 144 நாட்களாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 என்ற விலையிலும், டீசல் ரூ.94.24 என்ற விலையும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு பெரும் நிவாரணம் அளித்துள்ளது. இன்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலைகளில் இருந்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

petrol,diesel,prices to fall,cylinder,october ,பெட்ரோல், டீசல், விலை குறையும், சிலிண்டர், அக்டோபர்

இதன் கீழ், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு முறை வழ்ங்கும் மானியமாக ரூ.22 ஆயிரம் கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பெட்ரோலிய அமைச்சகம் ரூ.30,000 கோடி மானியம் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது. எண்ணெய் நிறுவனங்கள் LPG சில்லறை விற்பனையில் நஷ்டத்தை சந்திக்கின்றன. இந்த இழப்பை ஈடுகட்ட, இந்த நிவாரணம் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.

எனினும், எண்ணெய் நிறுவனங்கள் வணிக ரீதியான LPG
சிலிண்டரின் விலையை 25.50 ரூபாய் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, அதன் பிறகு டெல்லியில் 19 கிலோ வணிக LPG சிலிண்டரின் விலை 1885 ரூபாயில் இருந்து 1859.50 ரூபாயாக குறைந்துள்ளது. இந்த ஆண்டை பொறுத்தவரை, இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல், தற்போது வரை மொத்தமாக சிலிண்டருக்கு ரூ.494.50 விலை குறைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அக்டோபர் மாதத்தில் எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1053 ஆக உள்ளது.

Tags :
|
|