Advertisement

மீண்டும் வெளியாக இருக்கும் இன்ஸ்டாகிராம் லைட் செயலி

By: Karunakaran Thu, 17 Dec 2020 1:09:27 PM

மீண்டும் வெளியாக இருக்கும் இன்ஸ்டாகிராம் லைட் செயலி

பேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராம் லைட் செயலியை வெளியிட துவங்கி இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் பயனர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. புதிய இன்ஸ்டாகிராம் லைட் ஆப் அளவில் 2MB-க்கும் குறைவாகவே இருக்கிறது.

அளவில் மிக சிறியதாக இருந்தாலும், செயலி சீராகவும், வேகமாகவும் இயங்கும் என கூறப்படுகிறது. இந்த செயலி லோ-எண்ட் ஸ்மார்ட்போன்களை குறிவைத்து உருவாக்கப்பட்டு இருக்கின்றன. முன்னதாக இதேபோன்ற செயலியை பேஸ்புக் நிறுவனம் 2018 ஆண்டு வாக்கில் மெக்சிகோவில் அறிமுகம் செய்தது.

instagram,lite processor,size,social media ,இன்ஸ்டாகிராம், லைட் செயலி, அளவு, சமூக மீடியா

இதுதவிர பேஸ்புக் லைட் செயலியை அந்நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது. இதுவும் அளவில் சிறியதாகவே இருந்தது. இன்ஸ்டாகிராம் லைட் செயலி இந்தியாவில் தற்சமயம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைக்கிறது. பயனர்கள் இதனை கூகுள் பிளே ஸ்டோர் சென்று டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

விரைவில் இந்த செயலி சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. முதற்கட்டமாக இன்ஸ்டாகிராம் லைட் செயலி ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, பங்களா, குஜராத்தி, கன்னடா, மலையாளம், மராத்தி மற்றும் பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளில் கிடைக்கிறது.

Tags :
|