Advertisement

புதிதாக வேலை தேடுபவர்களுக்கு வழிகாட்டும் வழியாக உள்ள நேர்காணல்கள்

By: Karunakaran Sun, 01 Nov 2020 1:57:39 PM

புதிதாக வேலை தேடுபவர்களுக்கு வழிகாட்டும் வழியாக உள்ள நேர்காணல்கள்

கொரோனா பரவல், வேலை இழப்புகளை ஏற்படுத்திவிட்டது. கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன், பல தொழில்துறைகள் எழுச்சி பெறும் என நம்பப்படுகிறது. அப்போது வேலை இழந்தவர்களும், புதிதாக வேலை தேடுபவர்களும் வேலை தேடி நிறைய நேர்காணலுக்கு செல்வார்கள்.
* இன்பர்மேஷனல் நேர்காணல் :
தங்கள் நிறுவனத்தில் தற்சமயம் வேலை காலி இல்லை என்ற நிலை இருந்தாலும், நீங்கள் விண்ணப்பித்து இருந்தால், உங்களை ஒரு சந்திப்புக்கு அழைப்பார்கள். அந்த சந்திப்பில் உங்களுக்குத் தெரிந்ததையும், அவர்களுக்குத் தெரிந்ததையும் பரிமாறிக்கொள்வீர்கள்.

* டைரக்டிவ் ஸ்டைல் நேர்காணல் : இப்படித்தான் நேர்காணல் செய்யப்போகிறேன் என்று எந்தவிதத் திட்டங்களும் முடிவுகளும் இல்லாமல் நடக்கும் நேர்காணல் முறை இது. இங்கு நீங்கள் மட்டுமல்லாமல் உங்களுடன் வந்திருக்கும் மற்ற போட்டியாளர்களையும் சேர்த்து ஒரே சமயத்தில் நேர்காணல் செய்வார்கள். உங்களுக்கு கேட்கப்பட்ட அதே கேள்வி மற்றவரிடமும் கேட்கப்பட வேண்டும் என்ற நியதி இல்லையெனினும், எல்லோரிடமும் ஒரே கேள்வியை முன்வைக்கும்போது நீங்கள் அனைவரும் தருகிற பதில்களை அப்போதே ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும். கொஞ்சம் கடினமாகவே இந்த முறை நேர்காணலின்போது நடந்துகொள்வார்கள்.

interviews,guides,new job seekers,work ,நேர்காணல்கள், வழிகாட்டிகள், புதிய வேலை தேடுபவர்கள், வேலை

* ஸ்க்ரீனிங் நேர்காணல் : சம்பந்தப்பட்ட பதவிக்கு ஏற்ற குறைந்தபட்சத் தகுதி உங்களிடம் இருக்கிறதா என்பதை அறிவதுதான் இந்த ‘ஸ்க்ரீனிங் இன்டர்வியூ’வின் நோக்கம். இங்கு உடல் மொழி, அதீத பணிவு இவை எல்லாம் தேவையே இல்லை. ஒரு காலி இடத்துக்கு அதிகமான விண்ணப்பங்கள் குவிகிற சமயத்தில், உங்களின் ‘விண்ணப்பத்தை’ மிக ஆழமாக ஆராய்வார்கள். அதில் சிறு சந்தேகம் தென்பட்டால் கூட, உங்களை நீக்கிவிடும் வாய்ப்பு இருக்கிறது. விண்ணப்பங்களில் உங்களின் தகுதி, திறமைகளை ‘ஹைலைட்’ செய்யுங்கள். இந்த இன்டர்வியூவில் சுற்றி வளைக்காமல் நேரடியான, தேவையான பதில்களை மட்டும் அளிக்கவும்.

* நடத்தை நேர்காணல் : நீங்கள் குறிப்பிட்ட ஒரு பணிக்கு மனதளவிலும், நடத்தை அளவிலும் தகுதியானவரா என்பதை ஆராய இந்த வகை நேர்காணல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால் நீங்கள் நீங்களாக இருங்கள். படிப்பின்போதும், முன்னர் பார்த்த வேலையின்போதும் நீங்களாக மேற்கொண்ட சில முனைப்புகளை எடுத்துக் கூறுங்கள். இரண்டு நிமிடங்களுக்குள் பேசி முடிப்பது நல்லது.
* மனவலிமை நேர்காணல் : உங்களின் பொறுமையை சோதிக்கவே இந்த வகை நேர்காணல் நடத்தப்படும். எந்த கஷ்டத்திலும் நீங்கள் எவ்வளவு தூரம் தாக்குப் பிடிக்கிறீர்கள் என்பதுதான் இதன் அடிநாதம்.
* உணவு இடைவேளை நேர்காணல் : நேர்காணல் செய்பவர் உங்களை சாப்பிட அழைத்து நீங்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் வேளையில் எதாவது ஒரு கேள்வி கேட்பார். அந்தச் சூழ்நிலையை நீங்கள் எப்படிச் சமாளிக்கிறீர்களோ அதைப் பொறுத்து உங்களின் சாமர்த்தியம் நிர்ணயிக்கப்படும். மேலும், பல தனிப்பட்ட விஷயங்களைப் பேசவும் இந்த நேர்காணல் மேற்கொள்ளப்படும். இந்த வகை நேர்காணலின்போது உங்களை ஒரு விருந்தினராக கற்பனை செய்துகொள்ளுங்கள்.

Tags :
|