Advertisement

இந்திய சந்தையில் அறிமுகமானது ரியல்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்

By: Nagaraj Thu, 24 Dec 2020 8:49:51 PM

இந்திய சந்தையில் அறிமுகமானது ரியல்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்

ரியல்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்... ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் வாட்ச் எஸ் மற்றும் வாட்ச் எஸ் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.

புதிய வாட்ச் எஸ் மாடலில் 1.3 இன்ச் அளவில் வட்ட வடிவ எல்சிடி டச் ஸ்கிரீன் ஆட்டோ பிரைட்னஸ் வசதியுடன் வழங்கப்பட்டு உள்ளது. இது IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 24 மணி நேர இதய துடிப்பு சென்சார் வசதி, அலுமினியம் அலாய் கேஸ், 16 ஸ்போர்ட்ஸ் மோட்கள், கேமரா மற்றும் மியூசிக் கண்ட்ரோல், அதிகபட்சம் 15 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

indian market,realmy watch,pricing,determination ,இந்திய சந்தை, ரியல்மி வாட்ச், விலை, நிர்ணயம்

ரியல்மி வாட்ச் எஸ் ப்ரோ மாடலில் 1.39 இன்ச் வட்ட வடிவ AMOLED ஸ்கிரீன், ஆட்டோ பிரைட்னஸ், ஆம்பியன்ட் லைட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 100-க்கும் அதிகமான வாட்ச் பேஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்திய சந்தையில் ரியல்மி வாட்ச் எஸ் மாடல் விலை ரூ. 4999 என்றும் வாட்ச் எஸ் ப்ரோ மாடல் விலை ரூ. 9999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags :