Advertisement

அசத்தல் வசதிகளுடன் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போன் அறிமுகம்

By: Monisha Wed, 09 Dec 2020 11:21:22 AM

அசத்தல் வசதிகளுடன் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போன் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்திருக்கிறது. இது ஒவர்-இயர் டிசைன், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் பல்வேறு இதர அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் ஆப்பிள் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட 40எம்எம் டைனமிக் டிரைவர் மற்றும் ஹெச்1 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது பிரத்யேக அகௌஸ்டிக் டிசைன் கொண்டுள்ளது. இதன் ஹெட்பேண்ட் பிரேம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இது வளையும் தன்மை மற்றும் தலையில் அணிந்திருக்கும் போது அதிக சவுகரியத்தை வழங்குகிறது. ஹெட்போனில் வழங்கப்பட்டு உள்ள டிஜிட்டல் கிரவுன் கொண்டு வால்யூம், பிளேபேக், அழைப்புகளை ஏற்பது மற்றும் நிராகரிப்பது உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம்.

apple,headphone,backup,feature,introduction ,ஆப்பிள்,ஹெட்போன்,பேக்கப்,வசதி,அறிமுகம்

மேலும் இதில் அடாப்டிவ் இகியூ ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், டிரான்ஸ்பேரன்சி மோட் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஆடியோ கேட்கும் போது வெவ்வேறு வசதிகளை வழங்குகிறது.

ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் டைனமிக் ஹெட் டிராக்கிங் வசதி தியேட்டர் போன்ற ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இது 5.1, 7.1 மற்றும் டால்பி அட்மோஸ் போன்ற தரவுகளை துல்லியமாக அதிக தரத்தில் அனுபவிக்க வழி செய்கிறது. ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போன் அதிகபட்சம் 20 மணி நேர பேக்கப் வழங்குகிறது. புதிய ஆப்பிள் ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஒவர் இயர் ஹெட்போன் ஸ்பேஸ் கிரே, சில்வர், கிரீன், ஸ்கை புளூ மற்றும் பின்க் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 59,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags :
|
|