Advertisement

அமெரிக்க சந்தையில் புதிய 2021 மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ் மாடல் அறிமுகம்!

By: Monisha Mon, 08 June 2020 4:04:50 PM

அமெரிக்க சந்தையில் புதிய 2021 மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ் மாடல் அறிமுகம்!

அமெரிக்க சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2021 சிஎல்எஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. 2021 சிஎல்எஸ் மாடல்- மோஜேவ் சில்வர் மற்றும் சர்ரஸ் சில்வர் என இரண்டு புதிய நிறங்கள் மற்றும் புதிய பிளாக் அலாய் வீல்களுடன் கிடைக்கிறது. இதன் விங் மிரர்களும் கிளாஸ் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

காரினுள் MBUX இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் COMAND சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டிருக்கிறது. இத்துடன் பிரேக் அசிஸ்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

us market,2021 mercedes benz cls,brake assist facility,new colors,new black alloy wheels ,அமெரிக்க சந்தை,2021 மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ்,பிரேக் அசிஸ்ட் வசதி,புதிய நிறங்கள்,புதிய பிளாக் அலாய் வீல்கள்

2021 மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ் மாடலில் 3.0 லிட்டர் இன்லைன், 6 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் மற்றும் இகியூ பூஸ்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 358 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதுதவிர இதே என்ஜின் 425 பிஹெச்பி மற்றும் 581 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் டியூனிங்கிலும் கிடைக்கிறது.

புதிய சிஎல்எஸ் மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.4 நொடிகளில் எட்டிவிடும். இதன் 4 மேடிக் 4WD வேரியண்ட் இதே வேகத்தை 4.8 நொடிகளிலும், சாதாரன சிஎல்எஸ் மாடல் 5.1 நொடிகளில் எட்டும் திறன் கொண்டிருக்கின்றன.

Tags :