Advertisement

இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

By: Monisha Tue, 21 July 2020 5:59:08 PM

இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்திருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 6.82 இன்ச் ஹெச்டி பிளஸ் 20.5:9 டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, டெப்த் சென்சார், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ஓசன் வேவ் மற்றும் வைலட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 7999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 28 ஆம் தேதி துவங்குகிறது.

infinix company,indian market,smart4 plus,smartphone ,இன்ஃபினிக்ஸ் நிறுவனம்,இந்திய சந்தை,ஸ்மார்ட் 4 பிளஸ்,ஸ்மார்ட்போன்

இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் சிறப்பம்சங்கள்
- 6.82 இன்ச் 1640x720 பிக்சல் ஹெச்டி+ 20.5:9 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர்
- IMG பவர் விஆர் GE8320 ஜிபியு
- 3ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் எக்ஸ் ஒஎஸ் 6.2
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, எல்இடி ஃபிளாஷ், டெப்த் சென்சார்
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, டூயல் எல்இடி ஃபிளாஷ்
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டிடிஎஸ்-ஹெச்டி சரவுண்ட் சவுண்ட்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
- மைக்ரோ யுஎஸ்பி
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்

Tags :