- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- பட்ஜெட் விலையில் ஒன்பிளஸ் நார்டு என்100 அறிமுகம்!
பட்ஜெட் விலையில் ஒன்பிளஸ் நார்டு என்100 அறிமுகம்!
By: Monisha Mon, 26 Oct 2020 3:45:49 PM
ஒன்பிளஸ் நார்டு என்100 மாடலின் விவரங்கள், விலை மற்றும் வெளியீட்டு தேதி உள்ளிட்டவை இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி ஒன்பிளஸ் நார்டு என்100 ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்படும் என தெரிகிறது.
இத்துடன் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி போர்டிரெயிட் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஹெட்போன் ஜாக், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
புதிய ஒன்பிளஸ் நார்டு என்100 ஸ்மார்ட்போனுடன் நார்டு என்10 5ஜி ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் நார்டு என்100 மாடலின் விலை 199 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 17,500 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நார்டு என்100 மாடல் விலை ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.