Advertisement

பெட்ரோல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்

By: vaithegi Thu, 08 June 2023 12:01:27 PM

பெட்ரோல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்

சென்னை: ஒரு வருடத்திற்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் ... சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொண்டு வருகின்றன.

இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் ஓராண்டுக்கும் மேலாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் வரை குறைக்கப்படவில்லை. அதன்படி சென்னையில் தொடர்ந்து 383-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி , 1 லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

international market,petrol,diesel ,சர்வதேச சந்தை,பெட்ரோல் ,டீசல்

இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைப்பினால், பெட்ரோல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து விட்டதாலும், இழப்பில் இருந்து மீண்டு விட்டதாலும் விலையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.தற்பொழுது, வெளியாகியுள்ள இந்த தகவலால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சந்தோசத்தில் உள்ளனர்.

Tags :
|