Advertisement

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல்

By: vaithegi Wed, 18 Oct 2023 3:41:21 PM

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக  தகவல்

சென்னை: இந்திய அரசு பெட்ரோலிய கச்சா எண்ணெய் மீதான விண்ட்ஃபால் வரியை குறைத்து இருப்பதாக தற்போது அறிவிப்பு ....நாடு முழுவதும் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த 500 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய அரசு பெட்ரோலிய கச்சா எண்ணெய் மீதான விண்ட்ஃபால் வரியை குறைத்து இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வரி குறைப்பு வரும் அக்டோபர் 18 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

petrol,diesel price,india , பெட்ரோல், டீசல் விலை ,இந்தியா

தற்போது பெட்ரோலிய கச்சா எண்ணெய் மீதான காற்றழுத்த வரி டன் ஒன்றுக்கு 12,200 இந்திய ரூபாயில் இருந்து 9,050 இந்திய ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது. அதே போன்று விமான விசையாழி எரிபொருளுக்கான காற்றழுத்த வரியை லிட்டருக்கு 3.50 ரூபாயிலிருந்து 1 ரூபாயாகவும், டீசல் மீதான காற்றழுத்த வரியை லிட்டருக்கு 5 ரூபாயிலிருந்து 4 ரூபாயாகவும் குறைந்து உள்ளது.

இதனை அடுத்து பெட்ரோல், டீசல் விலையில் எந்த வித மாற்றம் இல்லாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதியில் இருந்தாலும், விலை குறையுமா என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது அரசின் இந்த அறிவிப்பால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|