Advertisement

அடுத்த ஆண்டு சிலிண்டரின் விலை கணிசமாக குறையும் என தகவல்

By: vaithegi Fri, 23 Dec 2022 3:43:18 PM

அடுத்த ஆண்டு சிலிண்டரின் விலை கணிசமாக குறையும் என தகவல்

இந்தியா: இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலையானது சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. மேலும் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு விலையை நிர்ணயிக்கின்றனர்.

இதனை அடுத்து கடந்த ஜூலை மாதம் முதல் எல்பிஜி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.அந்த வகையில் தற்போது சென்னையில் ரூ.1068-க்கு சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் ஜெய்ப்பூரில் சிலிண்டரின் தற்போதைய விலை ரூ.1056 ஆகவும், மும்பையில் ரூ.1052.50க்கும், டெல்லியில் ரூ.1053க்கும்,

price per cylinder,lpg , சிலிண்டரின் விலை ,எல்பிஜி

அதைத்தொடர்ந்து கொல்கத்தாவில் ரூ.1079க்கும், லக்னோவில் ரூ.1090-க்கும், பாட்னாவில் ரூ.1151க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை ஏற்றத்தால் சாமானிய மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள். மேலும் இந்த ஆண்டு ஜூலை முதல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 30% குறைந்துள்ளது.

அதிலும் குறிப்பாக கடந்த அக்டோபர் மாதத்தில் கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 85 டாலராக இருந்த போது சிலிண்டர் விலை ரூ.899 ஆக இருந்தது. தற்போது ரூ.150 வரை இந்த சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 83 டாலராக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 2021 அக்டோபர் மாதத்திலும் எண்ணெய் விலை குறைந்துள்ளது. இதே போன்று புத்தாண்டு தொடக்கத்திலும் எல்பிஜி விலையில் அரசு தள்ளுபடியை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :