Advertisement

மதுரையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை

By: vaithegi Fri, 02 Dec 2022 6:09:21 PM

மதுரையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை

மதுரை : ஒரு கிலோ ரூ.2000 .... மதுரை மல்லிகை பூ ஒரு கிலோ 2 ஆயிரம் ரூபாய் என்று விற்பனையாகி வருவதை அடுத்து பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தாலும் மல்லிகை பூ விவசாயிகள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

மதுரை மல்லி என்பது தமிழகம் முழுவதும் பிரபலமானது என்பதும் வாசனையுள்ள இந்த மல்லியையைதான் அனைவரும் விரும்பி வாங்குவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து வெயில் காலத்தில் அதிகம் வரத்து இருப்பதால் மல்லிகை பூ விலை குறைவாக இருந்தாலும் பனிக்காலத்தில் வரத்து குறைவாக வருவதால் விலை அதிகமாக இருக்கும்

jasmine,madurai ,மல்லிகைப்பூ ,மதுரை

அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே அதிகமாக பனி அடித்து வரும் நிலையில் மல்லிகை வரத்து குறைந்தது. எனவே இதன் காரணமாக மதுரை மல்லி இப்போது ஒரு கிலோ 2 ஆயிரம் ரூபாய் வரை சந்தையில் விற்பனையாகி வருகிறது.

இதையடுத்து இந்த விலை வாங்கும் மக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :