Advertisement

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்து

By: vaithegi Tue, 14 June 2022 11:19:36 AM

சென்னையில்  இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்து

சென்னை: உக்ரைன் மீது ரஷ்யா போர் எதிரொலியால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவகிறது. மேலும், இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்து வருகிறது.

மேலும் தங்கத்தில் முதலீடு செய்தால் பெண் குழந்தைகள் மேற்படிப்பு மற்றும் திருமணம் ஆகிய தேவைகளுக்கு இந்த முதலீடுகள் மிகவும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது, நாளுக்கு நாள் தங்கத்தின் விலை மதிப்பு உயர்ந்து கொண்டே செல்வதால் தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு பிற்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும்.

profit,price of gold,shaving ,லாபம், தங்கத்தின் விலை ,சவரன்

தொடர்ந்து தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் குறைந்து உள்ளது.

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.38,680-க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.4,835-க்கு விற்பனையாகி வந்தது.ஆனால் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்து, சவரன் ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.4,740-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சில்லறை வர்க்கத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.66-க்கு விற்பனை ஆகிறது.

Tags :
|