Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை உயர்வு

By: vaithegi Fri, 14 Apr 2023 11:06:52 AM

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை உயர்வு

சென்னை: தங்கத்தின் மீதான மவுசு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதற்கேற்ப தங்கத்தின் விலையும் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. ஆனாலும் தங்கத்தின் மீதான மோகம் குறைந்தபாடில்லை.

அதற்கு காரணம் நடுத்தர வர்க்கத்தினர் முதல் அனைவரும் தங்கத்தை சிறந்த சேமிப்பாகவும், தங்கத்தில் முதலீடு செய்வதை பாதுகாப்பாகவும் கருதுகின்றனர். ஆனால் தங்கம் விலை ஏற்ற இறங்களுடன் காண்பது போல் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. அந்தவகையில் கடந்த 11ம் தேதி 240 ரூபாய் அதிகரித்தது.

gold price,chennai ,தங்கம் விலை ,சென்னை

அதேபோல் நேற்று முன்தினம் (12ம் தேதி) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 அதிகரித்து , 1 சவரன் ரூ. 45,440க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 352 ரூபாய் உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராம் ரூ. 5,720க்கும், 1 சவரன் ரூ. 45,760 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 20 காசுகள் அதிகரித்து , 1 கிராம் வெள்ளி ரூ. 83 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


Tags :