Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை

By: vaithegi Tue, 23 Aug 2022 1:08:26 PM

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னை: மத்திய அரசு தங்கத்தின் மீதான GST வரியை 3% அதிகரித்தியது. அதை தொடர்ந்து இறக்குமதி வரியும் அதிகரிக்கப்பட்டது.இந்த இறங்குமதி உயர்த்தப்பட்ட ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை ரூ. 1000 வரை உயர்த்தது. அதன் பின் தங்கம் விலை தினந்தோறும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்த மாத தொடக்கத்திலேயே தங்கத்தின் விலையானது சற்று குறைந்து விற்கப்பட்டதால் நகை வாங்க மக்கள் சற்று ஆர்வம் காட்டினர். அதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்துள்ளது.

gold price,chennai ,தங்கத்தின் விலை ,சென்னை

அந்த வகையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ. 38,400 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.4,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.

அதனபடி ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து ரூ.60.70-க்கும், ஒரு கிலோ வெள்ளி 60,700-க்கும் விற்பனையாகி வருகிறது. சில நாட்களாகவே தங்கத்தின் விலை சற்று குறைந்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :