Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை

By: vaithegi Sat, 27 Aug 2022 11:25:03 AM

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னை: கடந்த சில நாட்களாகவே ஒரு சவரன் 38 ஆயிரத்தை கடந்து வந்தது என்று தான் கூற வேண்டும். இதனால் பலரும் திருமண சீசனில் கூட நகை வாங்க முடியாமல் தவித்து கொண்டு வந்தனர். அவ்வப்போது தங்க விலை சரிந்தாலும் அவ்வளவாக அது மக்களை சந்தோசப்படுத்தவில்லை.

அதிலும் குறிப்பாக இந்த வாரம், தொடர்ந்து அதிகமாவே இருந்து வந்தது. இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று மக்கள் மகிழ்ச்சி அடையும்படியாக தங்க விலை சற்று குறைந்துள்ளது

jewelery gold,chennai ,ஆபரணத் தங்கம்,சென்னை

அந்தவகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ரூபாய் 4805.00 என விற்பனையாகிறது. அதேபோன்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 குறைந்து ரூபாய் 38440.00 என விற்பனையாகி வருகிறது.

மேலும் சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5207.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41656.00 எனவும் விற்பனையாகி வருகிறது. இதேபோன்று வெள்ளி கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் குறைந்து ரூபாய் 60.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 60700.00 எனவும் விற்பனையாகி வருகிறது

Tags :