Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 அதிகரித்தது

By: vaithegi Fri, 09 June 2023 11:45:09 AM

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 அதிகரித்தது

சென்னை: ஜூன் மாதம் தொடக்கம் முதல் தங்கம் விலை சற்று குறைந்து விற்பனையாகி வந்தது. அந்தவகையில் கடந்த ஜூன் 3-ம் தேதி சவரனுக்கு ரூ.464 குறைந்து 1 சவரன் ரூ.44,640க்கும் , 1கிராம் 5,580 ரூபாய்க்கும் விற்பனையானது.

அதன்பின் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கி கடந்த 6ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, விலை 44 ஆயிரத்து 800 ரூபாயை தொட்டது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்தது. எனவே இதன் மூலம் சென்னையில் 1சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ 44, 520 ஆகவும், 1 கிராம் 5,565 ரூபாயாகவும் விற்கப்பட்டது.

jewelery gold price,chennai ,ஆபரணத் தங்கம் விலை,சென்னை

இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக அதிகரித்து நகைப்பிரியர்களுக்கு சற்று அதிர்ச்சியளித்துள்ளது. அந்தவகையில் சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.5,600 ஆகவும், 1 சவரன் ரூ.44,800 ஆகவும் விற்கப்படுகிறது.

அதேபோன்று வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.2 அதிகரித்திருக்கிறது. இதையடுத்து அதன்படி சில்லறை வர்த்தகத்தில் 1 கிராம் வெள்ளி 79 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளி ரூ.79,700 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Tags :