Advertisement

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 736 ரூபாய் இன்று உயர்வு

By: Monisha Tue, 18 Aug 2020 4:04:11 PM

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 736 ரூபாய் இன்று உயர்வு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 736 ரூபாய் இன்று உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

அதன் காரணமாக தங்கம் விலையில் கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறன்றன. கடந்த ஒருசில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

chennai,gold,silver,prices,investment ,சென்னை,தங்கம்,வெள்ளி,விலை,முதலீடு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 736 ரூபாய் உயர்ந்து 41 ஆயிரத்து 336 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு 92 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 167 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 60 காசுகள் உயர்ந்து 76 ரூபாய் 30 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|
|
|