Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்

By: vaithegi Tue, 12 July 2022 12:20:30 PM

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்

சென்னை: இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் இறக்குமதிக்கான வரி விகிதம் அதிகரிக்கப்பட்டதால் தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடும் என தகவல்கள் வெளியானது. ஆனால், கடந்த ஒரு சில நாட்களாகவே விற்பனை செய்யப்பட்டு வரும் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து கொண்டு வருகிறது.

அதன்படி சென்னையில் இன்று (ஜூலை 12) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 வரை குறைந்து வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

gold price,chennai ,தங்கத்தின் விலை,சென்னை

இதனால் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,360 என விற்பனை செய்யப்படுகிறது. அதே மாதிரி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 வரை குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,670க்கு விற்பனையாகிறது.

மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்றைய விற்பனையில் 50 காசுகள் குறைந்து இன்று ரூ.62.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பால் இன்று ஆபரணத் தங்கத்தின் விற்பனை மிக அமோகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Tags :