Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்

By: vaithegi Wed, 13 July 2022 11:50:38 AM

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்

சென்னை: இந்தியாவில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் ஏற்றம் கண்டு வருகிறது. உலக நாடுகளில் தங்கத்தை கொள்முதல் செய்வதில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது.

மேலும் இந்தியாவில் தங்கத்தினால் ஆன அணிகலன்களை அணிவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் தங்கத்தின் மீதான GST வரி 3% அதிகரிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து இறங்குமதி வரியையும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 78 குறைந்துள்ளது.

gold price,chennai ,தங்கத்தின் விலை,சென்னை

அதனால் சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ. 37,440-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல ஒரு கிராம் தங்கம் ரூ. 9 குறைந்து, ரூ.4,680 க்கு விற்பனையாகி வருகிறது. அத்துடன் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.

அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு குறைந்து, ரூ.63.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வாரத்தின் தொடக்க நாளிலேயே தங்கம் விலை குறைந்துள்ளது ஆனால் தங்கம் விலை இனி வரும் நாட்களில் உயரும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Tags :