Advertisement

சென்னையில் ஆபரண தங்க விலை நிலவரம்

By: vaithegi Sat, 23 July 2022 12:57:30 PM

சென்னையில் ஆபரண தங்க விலை நிலவரம்

சென்னை: கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஜூலை 1ல் தங்கத்திற்கான இறக்குமதி வரி 10.75 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக ஒன்றிய அரசு உயர்த்தியது. இதனால் தங்கம் விலையும் எதிர்பாராத விதமாக அதிரடி உயர்வை சந்தித்தது.

இதை அடுத்து இறக்குமதி வரி அதிகரித்த அந்த ஒரு வார காலத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1000 வரை உயர்ந்தது. அதன் பிறகு மீண்டும் பழையபடி தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதும் என மாறி மாறி காணப்பட்டது.

ornamental gold,price ,ஆபரண தங்கம்,விலை

அதன்படி நேற்று தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத விதமாக அதிரடி சரிவை சந்தித்தது. அதாவது 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.4,680க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.37,440க்கு விற்பனையும் ஆனது.

ஆனால் இன்று காலை தங்கம் விலை வழக்கம் போல் கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.4,696-க்கும், சவரனுக்கு ரூ.128 உயர்ந்து, ரூ.37,568க்கும், விற்பனை ஆகி இல்லத்தரசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. .

Tags :