Advertisement

தொடர்ந்து சரியும் ஆபரணத் தங்கம் விலை

By: vaithegi Sat, 25 Feb 2023 11:20:56 AM

தொடர்ந்து சரியும் ஆபரணத் தங்கம் விலை

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நேற்று முன் தினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.41,960க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதையடுத்து கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,245க்கு விற்கப்பட்டது. இதேபோன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ரூ.71.50க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று நேற்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 5,235 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

gold,chennai,silver ,தங்கம் ,சென்னை,வெள்ளி

சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் வரை குறைந்து 41,880 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 60 பைசா குறைந்து 70.90 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 70,900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.25 குறைந்து 5,210 ரூபாய்க்கு விற்பனை செய்யபட்டு வருகிறது. சவரன் ஒன்றுக்கு 200 ரூபாய் வரை குறைந்து 41,680 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று வெள்ளி விலை கிராமுக்கு 90 பைசா குறைந்து 70.00 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 70,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|