Advertisement

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது

By: vaithegi Thu, 08 June 2023 11:48:33 AM

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த மே உச்சத்தை தொட்டது. இதன் பிறகு தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவி கொண்டு வருகிறது. மே மாத தொடக்கத்தில் 46 ஆயிரம் ரூபாயாக அதிகரித்த தங்கத்தின் விலை ஜூன் மாதத்தில் சற்று குறைய தொடங்கியுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 464 குறைந்தது. நேற்று முன்தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்தது . இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் விலை ஆனது 44 ஆயிரத்து 800 ரூபாயை தொட்டது.

jewelery gold price,chennai , ஆபரணத் தங்கத்தின் விலை ,சென்னை

இதையடுத்து நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 அதிகரித்து , ரூ.44,840க்கு விற்பனையானது. 1 கிராம் வெள்ளி 20 காசுகள் குறைந்து ரூ.77.80க்கு விற்பனையாகிறது. இதன் காரணமாக வெள்ளி விலை கிலோ ரூ.77,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் இன்றைய விலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.320 குறைந்து உள்ளது. இதன் மூலம் 1 சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூபாய் 44 ஆயிரத்து 520 ஆக விற்பனை ஆகிறது .1 கிராம் தங்கத்தின் விலை 5,565 ரூபாயாக விற்பனை செய்யப்படும் நிலையில், கிராமுக்கு ரூபாய் 40 குறைந்துள்ளது.

Tags :