Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது

By: vaithegi Wed, 14 June 2023 2:41:14 PM

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் இருந்து கொண்டு வருகிறது. திடீரென ஏற்றம் காணும் தங்கம் விலை பின்னர் மெல்ல மெல்ல சரியத் தொடங்குகிறது. அந்தவகையில் கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.5,600 ஆகவும், 1 சவரன் ரூ.44,800 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.5580 க்கும், ஒரு சவரன் ரூ.44,640 -க்கும் விற்பனையானது. அதன் பின் நேற்று மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹80 உயர்ந்து 1 சவரன் ₹44,720-க்கு விற்பனையானது.

gold price,chennai , தங்கம் விலை,சென்னை

அதேபோன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 79.20-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (புதன்கிழமை) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து, 1 கிராம் ரூ.5,550 -க்கு விற்பனையாகிறது.

மேலும் சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.44,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,144க்கு விற்கப்படுகிறது. இதேபோன்று வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து 1 கிராம் வெள்ளி ரூ.78.50-க்கும், ஒரு கிலோ பார் ரூ.78,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


Tags :