Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹64 உயர்வு

By: vaithegi Fri, 14 July 2023 11:27:13 AM

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹64 உயர்வு


சென்னை: ஏற்றம் கண்ட தங்கம் மற்றும் வெள்ளி ...சென்னையில் கடந்த சில வாரங்களாக தங்கம் விலை உயர்வதும், சரிவதுமாக இருந்தாலும், சவரன் 44ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே விற்பனையாகி வந்தது. அந்தவகையில் நேற்று முன்தினம் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.144 அதிகரித்து , ஒரு சவரன் 44,000 ரூபாயை தொட்டது. கிராமுக்கு 18 ரூபாய் அதிகரித்து 1 கிராம் ரூ.5,500க்கு விற்கப்பட்டது.

இதையடுத்து இதன் தொடர்ச்சியாக நேற்று தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடியாக ஏற்றம் கண்டது.எனவே அதன்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 அதிகரித்து, 1 சவரன் 44,296 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோன்று கிராமுக்கு 37 ரூபாய் உயர்ந்து 1கிராம் 5,537 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி விலை நேற்று ஒரே நாளில் ரூ. 2.50 காசுகள் அதிகரித்து 1 கிராம் ரூ.79.50க்கு விற்கப்பட்டது.

price of jewelery gold,silver ,ஆபரணத் தங்கத்தின் விலை ,வெள்ளி

இந்த நிலையில் 3வது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 அதிகரித்து, 1 சவரன் ரூ.44,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று கிராமுக்கு 8 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ₹5,545-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 80 காசுகள் அதிகரித்து, 1 கிராம் 81 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.81,300க்கு விற்கப்படுகிறது.

Tags :