Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்வு

By: vaithegi Wed, 07 June 2023 1:47:39 PM

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்வு

சென்னை: சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது .... சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த மே உச்சத்தை தொட்டது எனலாம். கிட்டத்தட்ட ரூ.46ஆயிரத்தை கடந்து சாமானியர்களை நடுங்க வைத்தது. இதன் பிறகு தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் காணப்படுகிறது.

அதிலும் குறிப்பாக மே மாத தொடக்கத்தில் 46 ஆயிரம் ரூபாயாக அதிகரித்த தங்கத்தின் விலை ஜூன் மாதத்தில் சற்று குறைய தொடங்கி உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 464 குறைந்தது.

நேற்று முன்தினம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து 1 கிராம் ரூ. 5,570க்கு விற்பனையானது. அதேபோன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து 1 சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 44 ஆயிரத்து 560 ஆக இருந்தது.

jewelery gold price,chennai ,ஆபரணத் தங்கத்தின் விலை,சென்னை

எனினும் நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்தது. இதன் மூலம் 1 சவரன் தங்கம் விலை ஆனது 44 ஆயிரத்து 800 ரூபாயை தொட்டது.

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து, ரூ.44,840க்கு விற்பனையாகி வருகிறது. மேலும் அத்துடன் கிராமுக்கு ரூ.5 அதிகரித்து 1 கிராம் தங்கம் விலை ரூ.5,605க்கு விற்பனையாகிறது. அதேபோன்று 1 கிராம் வெள்ளி 20 காசுகள் குறைந்து ரூ.77.80க்கு விற்பனையாகிறது. எனவே இதன் காரணமாக வெள்ளி விலை கிலோ ரூ.77,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :