Advertisement

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை

By: vaithegi Thu, 04 Aug 2022 11:16:48 AM

சென்னையில்  ஆபரணத்தங்கத்தின் விலை

சென்னை: உலகில் ஆசிய நாடுகளில் தான் அதிக அளவு தங்கத்தை பயன்படுத்துகின்றனர். அதிலும் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் தங்கத்தின் இறக்குமதி அதிகமாகவே இருக்கிறது. இந்நிலையில் ஏற்பட்ட கொரோனா பேரிடர் காரணமாக இந்த இரு நாடுகளிலும் தங்க இறக்குமதி வெகுவாக குறைந்துள்ளது.

கடந்த ஆண்டில் கொரோனா பரவலால் ஏற்பட்ட வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு, ஊரடங்கு, சர்வதேச விமான தடை ஆகிய நடவடிக்கைகள் காரணமாகவும் தங்கத்தின் விலையானது அதிகரித்து கொண்டே வருகிறது. அதே நேரம் பங்கு சந்தை சரிவடைவதால் மக்கள் தங்கம் முதலீடு செய்வதை விரும்புகின்றனர். இதுவும் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.

chennai,price,gold ,சென்னை,விலை,தங்கம்

இந்நிலையில் இந்தியாவில் மத்திய அரசு, தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது. இந்த இறக்குமதி வரி அதிகரித்த ஒரு வார காலத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1000 வரை உயர்ந்தது. இருப்பினும் இம்மாத தொடக்கத்திலேயே தங்கத்தின் விலையானது சவரனுக்கு 160 குறைந்தது.

இதை அடுத்து இன்றைய காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.23 உயர்ந்து ரூ.4,825-க்கு விற்பனையாகி வருகிறது. மேலும் தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.20 காசுகள் உயர்ந்து ரூ.63.20-க்கும், ஒரு கிலோ 63,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|