Advertisement

தொடர் சரிவில் ஆபரணத்தங்கத்தின் விலை

By: vaithegi Thu, 22 June 2023 11:54:47 AM

தொடர் சரிவில் ஆபரணத்தங்கத்தின் விலை

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடனேயே இருந்து கொண்டு வருகிறது. சில நாட்கள் குறைந்த அளவு சரிவதும், அடுத்த நாளே அதிரடியாக உயர்வதுமாக இருந்து வரும் தங்கம் விலை கடந்த 2 நாட்களாக சரிவை சந்தித்து கொண்டு வருகிறது. அந்த வகையில் வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை தங்கம் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

அதன் பின்னர் செவ்வாய்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 1 கிராம் 5,535 ரூபாய்க்கும், 1 சவரன் ரூ. 44,280 க்கும் விற்பனையானது. நேற்றும் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.240 குறைந்து 1 கிராம் ரூ.5,505 க்கும், 1 சவரன் ரூ. 44,040க்கும் விற்பனையானது.

price,sale of jewellery , ஆபரணத்தங்கத்தின் விலை,விற்பனை

எனவே இதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்திருக்கிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து உள்ளது. இதையடுத்து இதன்மூலம் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் ரூ.5,485க்கும், சவரன் ரூ.43,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று வெள்ளி விலையும் கனிசமாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்த நிலையில் , நேற்று அதிரடியாக கிராமுக்கு 2 ரூபாய் 10 காசுகள் சரிந்து ரூ. 76.50 காசுகளுக்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் இன்று 1 கிராம் வெள்ளி ரூ.1.50 குறைந்து ரூ.75க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.75,000க்கு விற்கப்படுகிறது.

Tags :
|