Advertisement

  • வீடு
  • வணிகம் or வர்த்தகம்
  • ஜியோவின் 5ஜி சேவை முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பத்தில் அளிக்கப்படும் - முகேஷ் அம்பானி

ஜியோவின் 5ஜி சேவை முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பத்தில் அளிக்கப்படும் - முகேஷ் அம்பானி

By: Karunakaran Wed, 09 Dec 2020 2:22:13 PM

ஜியோவின் 5ஜி சேவை முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பத்தில் அளிக்கப்படும் - முகேஷ் அம்பானி

பிரதமர் மோடி நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், தற்போது 4ஜி தொலைத்தொடர்பு சேவைகளை பயன்படுத்தி வருகிறோம். அடுத்த தலைமுறையான 5ஜி சேவை உரிய நேரத்தில் அறிமுகமாக ஒன்றுபட்டு பணியாற்றுவோம் என்று கூறினார்.

இந்நிலையில், 5ஜி சேவை அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 5ஜி நெட்வொர்க் சேவையை அடுத்த ஆண்டு இரண்டாவது பாதியில் அறிமுகப்படுத்துவதில் ஜியோ முன்னோடியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

jio,5g service,technology,mukesh ambani ,ஜியோ, 5ஜி சேவை, தொழில்நுட்பம், முகேஷ் அம்பானி

மேலும் அவர், இதை விரைவாக அறிமுகப்படுத்துவதற்கும், மலிவாகவும், எல்லா இடங்களிலும் கிடைப்பதற்கும் கொள்கைரீதியான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். ஜியோவின் 5ஜி சேவை, முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பத்தில் அளிக்கப்படும். அச்சேவை, தற்சார்பு இந்தியாவை அடைய உதவும் என்று கூறினார்.

5ஜி சேவையால், நான்காம் தொழிற்புரட்சியில் இந்தியா பங்கேற்பதுடன், அதற்கு தலைமை தாங்கும். நிச்சயமாக ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டிப் பிடிக்கும் என முகேஷ் அம்பானி தெரிவித்தார். இதனால் விரைவில் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|