Advertisement

ஜெபிஎல் நிறுவனத்தின் ஆறு ஹெட்செட்கள் இந்திய சந்தையில் அறிமுகம்!

By: Monisha Thu, 18 June 2020 6:13:24 PM

ஜெபிஎல் நிறுவனத்தின் ஆறு ஹெட்செட்கள் இந்திய சந்தையில் அறிமுகம்!

இந்திய சந்தையில் ஜெபிஎல் நிறுவனம் கேமிங் ஹெட்செட் சீரிசை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜெபிஎல் குவாண்டம் சீரிசில் மொத்தம் ஆறு ஹெட்செட்கள் அறிமுகமாகி இருக்கின்றன.

புதிய கேமிங் ஹெட்செட்களில் ஜெபிஎல் நிறுவனத்தின் குவாணடம் சவுண்ட் சிக்னேச்சர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் மொத்தம் ஆறு ஹெட்செட் மாடல்கள் உள்ளன. இவை பொழுதுபோக்கு கேமர்கள் மற்றும் போட்டிகளில் பங்கேற்கும் கேமர்களுக்கென பிரத்யேக ஆப்ஷன், வையர்டு மற்றும் வயர்லெஸ் ஆப்ஷன்களை கொண்டிருக்கின்றன.

indian market,jpl company,gaming headset,quantum series ,இந்திய சந்தை,ஜெபிஎல் நிறுவனம்,கேமிங் ஹெட்செட்,குவாண்டம் சீரிஸ்

ஜெபிஎல் குவாண்டம் சீரிஸ் கேமிங் ஹெட்செட்கள் கணினி, மேக், எக்ஸ்பாக்ஸ், பிளேஸ்டேஷன், நின்டென்டோ ஸ்விட்ச், மொபைல் மற்றும் விஆர் என பல்வேறு தளங்களுக்கான சப்போர்ட் கொண்டிருக்கிறது. புதிய குவாண்டம் 100, குவாண்டம் 200, குவாண்டம் 300 மாடல்களில் பியு லெதர்-ராப் செய்யப்பட்ட மெமரி ஃபோம் இயர் குஷன்களை கொண்டிருக்கிறது.

விலை உயர்ந்த குவாண்டம் 600, குவாண்டம் 800 மற்றும் குவாண்டம் ஒன் மாடல்களில் பிரீமியம் லெதர் ராப் செய்யப்பட்ட மெமரி ஃபோம் இயர் குஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஜெபிஎல் குவாண்டம் கேமிங் ஹெட்செட் சீரிஸ், குவாண்டம் 100 பேஸ் மாடலின் விலை ரூ. 3999 என துவங்கி டாப் எண்ட் ஃபிளாக்ஷிப் குவாண்டம் ஒன் மாடல் ரூ. 29999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags :