- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- தங்கத்தின் இன்றைய நிலவரத்தை தெரிஞ்சுக்கோங்க
தங்கத்தின் இன்றைய நிலவரத்தை தெரிஞ்சுக்கோங்க
By: vaithegi Sun, 29 Jan 2023 11:39:31 AM
சென்னை: தங்கம் விலை உயரவில்லை ..... தங்கத்தின் விலை எவ்வளவு தான் உயர்ந்தாலும் அதன் விற்பனை எப்பொழுதும் குறைந்தபாடில்லை. அதிலும் குறிப்பாக இந்தியாவில் தங்கத்தின் நுகர்வு எப்பொழுதும் அதிகமாகத்தான் இருக்கும். புத்தாண்டு முதலே தங்கத்தின் விலையில் தொடர் உயர்வு ஏற்பட்டு கொண்டு வருகிறது.
இதையடுத்து இன்னும் சில தினங்களில் ஒரு கிராம் ஆபரணதங்கத்தின் விலையே ரூ.6000ஐ தொட்டு விடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது.இந்நிலையில் இன்று (29 ஜனவரி 2023) ஞாயிற்று கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
நேற்றைய விலையிலேயே விற்பனை ஆகி வருகிறது. எனவே அதன்படி இன்று ஒரு கிராம் ஆபரணத் ஆபரணத்தங்கம் 5350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 42800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் ஒரு கிராம் வெள்ளி 74.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 74200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.