Advertisement

இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் குறித்து விரிவாக பார்ப்போம்

By: vaithegi Sun, 26 Mar 2023 10:51:19 AM

இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் குறித்து விரிவாக பார்ப்போம்

சென்னை: தங்கத்தின் விலை கடந்த 1 வாரத்தில் மட்டும் ரூ.4,000 ரூபாய் வரை அதிகரித்ததால் நகைப் பிரியர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.அமெரிக்கா மைய வாங்கி அதன் வட்டி விகிதத்தை உயர்த்தியதே இதற்கு கரணம் என நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.

தமிழகத்தில் தங்கத்தின் விலை 45 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இதில் கடந்த 21-ம் தேதி அன்று உச்சபட்சமாக சவரனுக்கு ரூ.44,560க்கு விற்பனையானது.

இதையடுத்து படிப்படியாக குறைந்து கடந்த 24-ம் தேதி அன்று சவரன் ரூ.44,480 விற்பனை செய்யப்பட்டது. இதனை அடுத்து நேற்று ரூ.80 குறைந்து சவரன் ரூ.44400க்கும் ஒரு கிராம் ரூ.5550க்கும் விற்பனையானது.

gold price,sale , தங்கத்தின் விலை,விற்பனை

இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலையானது எந்தவித மாற்றமின்றி நேற்று ரேட்டிற்கே விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதனால் நகைப்பிரியர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

எனவே அதன்படி இன்று சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.44,400க்கும் ஒரு கிராம் ரூ.5,550க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போன்று வெள்ளியின் விலையும் மற்றுமின்றி கிராமுக்கு ரூ.76க்கும், அத்துடன் கிலோவுக்கு ரூ.76,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :