- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- இன்றைய நிலவரப்படி, தங்கம் விலை பற்றி பார்ப்போம்
இன்றைய நிலவரப்படி, தங்கம் விலை பற்றி பார்ப்போம்
By: vaithegi Wed, 22 Nov 2023 11:51:29 AM
சென்னை: தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. இதையடுத்து பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.
இந்தியா பொருளாதாரத்தில் அதிகரித்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. அந்த வகையில், வார தொடக்க நாளிலிருந்து தொடர் உச்சம் கண்டு வருவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில், நேற்றைய விலையில் இருந்து எந்தவித மாற்றமும் இன்றி இன்று விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த சில நாட்களுக்கு மேலும் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் சென்னையில் (22.11.2023) இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, 1 சவரன் ரூ.45,840க்கும், 1 கிராம் ரூ.5,730க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.79.40க்கும், கிலோ ரூ.79,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
(21.11.2023) நேற்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.45,840க்கும், கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.5,730க்கும் விற்பனையானது. அதேபோன்று, வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ரூ.79.40க்கும், கிலோ ரூ.79,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.