Advertisement

ஞாயிற்று கிழமையான இன்று தங்கத்தின் விலை நிலவரத்தை பற்றி பார்ப்போம்

By: vaithegi Sun, 16 July 2023 11:08:00 AM

ஞாயிற்று கிழமையான இன்று தங்கத்தின் விலை நிலவரத்தை பற்றி பார்ப்போம்


சென்னை: ஆபரணத் தங்கம் வணிக சந்தையின் தேவைக்கேற்ப விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து கொண்டு வருகிறது. இதையடுத்து எவ்வளவு விலை உயர்வை தங்க நகைகள் சந்தித்து வந்தாலும் மக்களின் தவிர்க்க முடியாத பட்டியலில் முதல் இடத்தை தான் பிடித்துள்ளது.

சிறந்த முதலீடாகவும், மிகவும் பாதுகாப்பான முதலீடாகவும் இருப்பதால் பலரும் தங்கத்தின் மீது முதலீடு செய்யத்தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த நிலையில், ஞாயிற்று கிழமையான இன்று வணிக சந்தை விடுமுறை என்பதால் நேற்றைய விலையின் படியாகவே தங்கம் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

gold price,chennai ,தங்கத்தின் விலை,சென்னை

இதனை அடுத்து அதன்படி, 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.5,550 க்கும், ஒரு சவரன் ரூ.44,400 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 24 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ.48,136 க்கும் ஒரு கிராம் ரூ.6,017க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. அதிலும் குறிப்பாக வெள்ளியானது சில்லறை விற்பனையில் ஒரு கிராம் ரூ. 81.80 க்கும், ஒரு கிலோ ரூ.81,800 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

Tags :