Advertisement

காய்கறிகளின் விலை நிலவரங்கள் குறித்து பார்ப்போம்

By: vaithegi Thu, 12 Oct 2023 4:58:01 PM

காய்கறிகளின் விலை நிலவரங்கள் குறித்து பார்ப்போம்


சென்னை: தமிழகத்தில் பருவ மழைக் காலம் தொடங்கியுள்ளது. வழக்கமாக மழைக்காலங்களில் காய்கறிகளின் விலை சற்று உயர்ந்திருக்கும். மேலும் தீபாவளி பண்டிகை சமயங்களிலும் அத்தியாவசிய காய்கறிகளின் விலை அதிகரிக்கப்படும்.

இதையடுத்து தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பொழிந்து வருவதால் ஒரு சில காய்கறிகளின் விலை ஆனது தொடர்ந்து உச்சத்திலிருந்து கொண்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி சந்தைகளில் காய்கறிகளின் விலைகளை 1 கிலோ என்று அளவில் கீழே குறிப்பிடப்பட்டு உள்ளது.

price of vegetables,diwali ,காய்கறிகளின் விலை ,தீபாவளி

அதன்படி அவரைக்காய் ரூபாய் 50, பீன்ஸ் ரூபாய் 70, பீட்ரூட் ரூபாய் 40, கத்தரி ரூபாய் 30 , பட்டர் பீன்ஸ் ரூபாய் 90, முட்டைக்கோஸ் ரூபாய் 10, காலிபிளவர் ரூபாய் 30, முருங்கைக்காய் ரூபாய் 50, இஞ்சி ₹240, மலைப்பூண்டு ரூபாய் 120,

மேலும் பச்சை மிளகாய் ரூபாய் 30, பெரிய வெங்காயம் ரூபாய் 30, சின்ன வெங்காயம் ரூபாய் 85, உருளைக்கிழங்கு ரூபாய் 30, தக்காளி ரூபாய் 16 என்ற நிலவரங்களின்படி விற்பனை செய்யப்பட்டு கொண்டு வருகிறது.

Tags :