Advertisement

இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்

By: vaithegi Sun, 27 Nov 2022 2:40:27 PM

இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்

சென்னை: தங்கத்தின் விலை நிலவரம் ... இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதி அதிகளவில் நடந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு திடீரென இறக்குமதி வரியை உயர்த்தியது. இதன் எதிரொலியாக தங்கத்தின் விலை உயர்ந்தது. அதனை தொடர்ந்து ஜிஎஸ்டி வரியும் உயர்த்தப்பட்டது.

எனவே இதன் காரணமாக தங்கம் விலை தினந்தோறும் உச்சத்தை தொட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது ஒரு கலாச்சார வழக்கமாக உள்ளது.

அதனால் மக்கள் அதிக அளவில் தங்கத்தால் ஆன அணிகலன்களை வாங்கி கொண்டு வருகின்றன. இந்த நிலையில் தங்கத்தின் விலை உயர்வு பெண்கள் மத்தியிலும் நகை பிரியர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்போது தங்கம் விலை குறையும் தங்க அணிகலன்கள் வாங்கலாம் என மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

gold price,jewelry lovers ,தங்கத்தின் விலை,நகை பிரியர்கள்

இதையடுத்து இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே நிலை நீடித்து வருகிறது. அதன்படி இன்று காலை நேர நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.39,400 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 4,925 க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தை தொடர்ந்து இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50 மற்றும் ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 67,500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :