Advertisement

ஆடிப் பெருக்கை தொடர்ந்து தங்கத்தின் விலை இன்றைய விலை பற்றி பார்ப்போம்

By: vaithegi Fri, 04 Aug 2023 4:25:45 PM

ஆடிப் பெருக்கை தொடர்ந்து தங்கத்தின் விலை இன்றைய விலை பற்றி பார்ப்போம்

சென்னை: தங்கத்தின் விலை தாறுமாறாக குறைந்த நிலையில் இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை ... தற்போது ஆடி மாதம் என்பதால் திருமணம் போன்ற எந்த நிகழ்ச்சியும் இல்லாத நிலையில் தங்கத்தின் விலை ஓரளவுக்கு குறைந்து கொண்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 குறைந்து ரூ.6017க்கும், சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.48040க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், நேற்று ஆடி பெருக்கு என்பதால் அதிகளவிலான தாய்மார்கள் நகை வாங்குவதில் மிகவும் ஆர்வம் செலுத்தினர்.

sale,price of gold ,விற்பனை   , தங்கத்தின் விலை

இந்த நிலையில், இன்றும் சென்னையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது, இன்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6017க்கும், சவரனுக்கு ரூ.48040க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், நேற்று சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.80 குறைந்து ரூ.78.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 30 காசுகள் குறைந்து ரூ.78.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|