Advertisement

  • வீடு
  • வணிகம் or வர்த்தகம்
  • இந்தியாவில் உள்ள முக்கிய பெரு நகரங்களில் சிலிண்டரின் விலை எவ்வளவு என்பது பற்றி பார்ப்போம்

இந்தியாவில் உள்ள முக்கிய பெரு நகரங்களில் சிலிண்டரின் விலை எவ்வளவு என்பது பற்றி பார்ப்போம்

By: vaithegi Tue, 03 Oct 2023 1:09:48 PM

இந்தியாவில் உள்ள முக்கிய பெரு நகரங்களில் சிலிண்டரின் விலை எவ்வளவு என்பது பற்றி பார்ப்போம்

இந்தியா: இந்தியாவில் கச்சா எரிபொருளின் விலை மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் ஏற்றுமதி, இறக்குமதி போன்றவற்றைப் பொறுத்து உள்நாட்டில் சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக மற்றும் வணிக ரீதியிலான எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமலிருந்து வந்தது.

அதாவது, உள்நாட்டில் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் 14.20 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.1118.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து, மத்திய அரசு வீட்டு உபயோக சிலிண்டரின் விலையை ரூ. 200 குறைத்து உள்ளது.

cylinder price,india ,சிலிண்டரின் விலை,இந்தியா


இந்த நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் வீட்டு உபயோக சிலிண்டர் எந்தெந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது பற்றிய பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் டெல்லியில் ரூ.903க்கும், கொல்கத்தாவில் ரூ.929க்கும், மும்பையில் ரூ.902.50க்கும், சென்னையில் ரூ.918.50க்கும், குர்கானில் ரூ.911.50க்கும்,

மேலும் நொய்டாவில் ரூ.900.50க்கும், பெங்களூரில் ரூ.905.50க்கும், புவனேஷ்வரில் ரூ.929க்கும், சண்டிகரில் ரூ.912.50க்கும், ஹைதராபாதில் ரூ.955க்கும், ஜெய்ப்பூரில் ரூ.906.50க்கும், லக்னோவில் ரூ.940.50க்கும், பாட்னாவில் ரூ.1001க்கும், திருவனந்தபுரத்தில் ரூ.912க்கும் விற்பனை செய்யப்பட்டு கொண்டு வருகிறது.

Tags :