Advertisement

இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்த விவரங்களை பார்ப்போம்

By: vaithegi Sun, 18 June 2023 2:38:57 PM

இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்த விவரங்களை பார்ப்போம்

சென்னை: தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை சந்தை நிலவரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அண்மை காலமாக தங்கத்தின் விலையானது சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிகரித்து கொண்டே வருகிறது.

அந்த வகையில் நேற்று காலை நேர நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை 1 சவரனுக்கு ரூ. 24 உயர்ந்து 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 44,360 க்கு விற்பனையானது.

gold price,normal ,தங்கம் விலை,சாமானிய

இந்நிலையில் இன்று விலையில் மாற்றமிருக்கும் என எதிர்பார்த்த வேளையில் இன்று (ஜூன்.18) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல்

நேற்றைய விலையிலேயே கிராம் ரூ . 5, 545 -க்கும் சவரன் ரூ.44,360க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று வெள்ளி கிராம் ரூ. 78.80 மற்றும் கிலோ ரூ. 78,800 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :