Advertisement

இன்றைய தங்கம் , வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்ப்போம்

By: vaithegi Thu, 23 Mar 2023 12:31:24 PM

இன்றைய தங்கம் , வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்ப்போம்

சென்னை: எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு.

அந்த, வகையில் கடந்த சில நாட்களாகவே விலை கடுமையாக உயர்ந்து விற்பனை ஆகி வருகிறது.இந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.800 என அதிரடியாக குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

gold,silver,comedian , தங்கம் , வெள்ளி ,நகைப்பிரியர்


இதனை அடுத்து அதன்படி நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,470க்கும், அத்துடன் சவரனுக்கு ரூ.43,760க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலையானது ரூ.560 என உயர்ந்துள்ளது.

அதன்படி இன்று சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,320 என விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று கிராமுக்கு ரூ.70க்கு உயர்ந்து, ரூ.5,540க்கும் விற்பனையாகிறது. இதே போன்று வெள்ளியின் விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

எனவே அதன்படி கிலோவுக்கு ரூ.1,400 என உயர்ந்து, கிலோவுக்கு ரூ.75,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து கிராமுக்கு ரூ.1.40 உயர்ந்து, கிராமுக்கு ரூ.75.40 என விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

Tags :
|
|