Advertisement

இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து காண்போம்

By: vaithegi Wed, 02 Aug 2023 11:57:37 AM

இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து காண்போம்

சென்னை: இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு ... சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து ஆபரணத் தங்கத்தின் விலை ஆனது நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஆனது இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு உயர்ந்து கொண்டே வருகிறது.

இதையடுத்து சென்னையில் நேற்று தங்கம் விலை சற்று அதிகரித்த நிலையில், இன்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.44,400-க்கும் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,550-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

gold price,sale,chennai ,தங்கம் விலை,விற்பனை,சென்னை

மேலும், வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து ஒரு கிராமுக்கு ரூ.80.30-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், 1 கிலோ வெள்ளி ரூ.80,300க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி,சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,560க்கும், கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.5,570க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Tags :
|